மீனவர்களுக்கு அறிவித்தல்

இன்று முதல் 8 ம் திகதி வரையில் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்து கொள்ளுமாறு மீனவர்களுக்கும் கடற்தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.


தென் மேற்கு வங்காள விரிகுடாவில் மன்னார் வளைகுடா கடற்பிரதேசங்களிலும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இன்று இரவுக்கு முன்னர் கரைக்கு அல்லது பாதுகாப்பான கடற்பிரதேசங்களுக்கு செல்லுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பிரதேசங்களில் இன்று இரவு குறைந்த தாழமுக்க நிலை உருவாக கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்று இரவு முதல் நாட்டிலும் நாட்டை சூழ உள்ள கடற்பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

No comments

Powered by Blogger.