மைத்திரியின் உத்தரவுப்படியே செயற்படுவோம்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவிப்புக்கு அமைவாகவே நாடாளுமன்ற பொதுசெயலாளர்கள் அலுவலகத்தின் அதிகாரிகள் செயற்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற பிரதி பொதுசெயலாளர் நீல் இந்தவெல இதனைத் தெரிவித்துள்ளார். ஒத்தி வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற அமர்வானது, எதிர்வரும் 14ஆம் திகதி கூட்டப்படவுள்ளது.

இது குறித்து ஜனாதிபதி வர்த்தமானி வெளியிட்டிருந்தார்.

எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், ஏற்கனவே இருந்த கட்டமைப்பே பின்பற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் சபாநாயகர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தல் அடிப்படையிலேயே நாடாளுமன்றத்தின் அலுவலர்கள், செயற்படுவார்கள் என நாடாளுமன்ற பிரதி பொதுசெயலாளர் கூறியுள்ளார்.

இதேவேளை, 14ம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, அதன் ஒழுங்குபத்திரத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் இன்னும் தங்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.
#Maithripala Sirisena  #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 
Powered by Blogger.