முன்னாள் அமைச்சரவைக்கு எதிராக முறைப்பாடு!

முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாக குற்றஞ் சுமத்தி பொலிஸ்மா அதிபர்

மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைபாடு செய்யப்படவுள்ளதாக, அமைச்சர்களின் செயலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றைய(08) தினம் குறித்த முறைப்பாட்டினை முன்வைக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இன்றுடன் 13 தினங்கள் கடந்துள்ள நிலையில்,முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் அலரி மாளிகையில் தங்கியிருந்து பொது சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவரது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல் முன்னாள் அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள், வீடுகளை இதுவரை கையளிக்கவில்லையென்றும் அமைச்சர்களின் செயலாளர் சங்கம் பிரதான செயலாளர் அஜித் ஜயசுந்தர மேலும் தெரிவித்திருந்தார். 

No comments

Powered by Blogger.