ஊடக அமைச்சின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்!


வெகுஜன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட கலாநிதி சரித ஹேரத் இன்று(08) காலை அவரது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது.

கலாநிதி சரித ஹேரத் இதற்கு முன்பதாகவும் வெகுஜன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் செயலாளராக கடமையாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.