போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

கிழக்கு மாகாணத்தில் சம்பள உயர்வினை வலியுறுத்தி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.


குறித்த பணிப்புறக்கணிப்பு நேற்று (வியாழக்கிழமை) மாலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தோர் கூறுகையில், “கடந்த அரசாங்கம் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும் சம்பள உயர்வு வழங்கப்படாத நிலையில் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்தோம்.

ஆகையால் தற்போதுள்ள புதிய அரசாங்கமாவது சம்பள அதிகரிப்பினை செய்யவேண்டுமென நேற்று முன்தினம் மாலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தோம்.

இந்நிலையில் குறித்த பணிப்புறக்கணிப்பினால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சாரதிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படுமென வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டோம்

மேலும் கோரிக்கை நிறைவேற்றப்படும் உடடியாக பணிக்கு திரும்புமாறு அமைச்சர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, தற்போது பணிக்கு திரும்பியுள்ளோம்” என போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.