புதிய அரசாங்கத்தை யாராலும் கவிழ்க்க முடியாது: டக்ளஸ்!

தற்போது தோற்றம் பெற்றுள்ள புதிய அரசாங்கம் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அதனை எவராலும் இனிமேல் கவிழ்க்க முடியாதென்றும்  மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.


யுத்தத்தினால் இழப்புக்களை சந்தித்தோருக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சயில் இடம்பெற்றது. இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 3 வருடங்களாக வீட்டுத்திட்டங்கள் வழங்குவதில் இழுபறி நிலையே தொடர்ந்து காணப்பட்டது. அவ்வாறு இழுபறியுடனேயே காலங்கள் கடத்தப்பட்டன.

விஞ்ஞான அமைச்சு என கூறிக்கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதியினால் உரிய முறையில் அமைச்சுக்களை தானாக தீர்மானித்து வழங்க முடிந்திருக்கவில்லை.

ஆனால் தற்போது பொருத்தமான வகையில் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாத இறுதிக்குள் வீட்டுத்திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூர்த்தி பயனாளிகளிற்கு சமூர்த்தி கொடுப்பணவு வழங்கப்படவில்லை. ஆகையால் அவர்களையும் சமூர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்து அடுத்த வருட ஆரம்பத்திற்குள் அவர்களுக்கும் சமூர்த்தி கொடுப்பணவு வழங்கப்படும்.

மேலும் வடக்கில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு பல்வேறு திட்டங்கள் எம்மிடம் உள்ளது. ஆகையால் பொருத்தமான வகையில் நாம் திட்டங்களை எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்வோம்.

அந்தவகையில் எமது வசமுள்ள வளங்களை ஏனையவர்களுக்கும் பகிர்ந்தளிக்க நாம் முன்வர வேண்டும். இதற்காக இங்கு உள்ளவர்களை பட்டினி போட்டோ, நீர் இல்லாமலோ நாம் அடுத்த மாவட்டத்திற்கு எந்த வளத்தையும் கொண்டு செல்ல போவதில்லை.

ஆகையால் சிலரது சுயநல அரசியலிற்காக மக்கள் தங்களின் ஆதரவை வழங்க கூடாது.

இதேவேளை இப்புதிய அரசு நிற்காது, கவிழ்க்கப்படும் என்றெல்லாம் ஒருசிலர் கூறுகின்றனர். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. ஜனாதிபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோரின் கை பலப்படுத்தப்பட்டு அரசு தொடர்ந்து  செயற்படும்” என டக்ளஸ்தேவானந்தா தெரிவித்துள்ளார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #jaffna #Dougles

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.