பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற அமைப்பும் இலங்கையிடம் கோரிக்கை!

இலங்கை அரசியலமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காக எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டும் என தாம் எதிர்பார்ப்பதாக பொதுநலவாய

நாடுகளின் பாராளுமன்ற அமைப்பு இலங்கையிடம் தெரிவித்துள்ளது.  விசேட அறிவித்தல் ஒன்றின் மூலம் இந்த அறிவித்தலை அவ்வமைப்பு விடுத்துள்ளது.  பொது நலவாய நாடுகளின் பாராளுமன்ற அமைப்பின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கடந்த சில தினங்களாக லண்டனில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டியதன் பின்னர் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காண முடியும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவ்வமைப்பு அவ்வறிக்கையில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.