சாவகச்சேரியில் விபத்து!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


கண்டி நெடுஞ்சாலையில் இன்று(செவ்வாய்கிழமை) பாரவூர்தி ஒன்று சென்று கொண்டிருந்த சமயம் வீதிக்கு குறுக்காக மாடு ஓடிய போது மாட்டுடன் பாரவூர்தி மோதுண்டதுடன், குடை சாய்ந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்மராட்சி – கண்டி நெடுஞ்சாலையில் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்கள் வீதியை குறுக்கறுத்து ஓடுவதனால் அண்மைக்காலமாக பல விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

இந்தநிலையில் இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பொதுக்கள் கோரியுள்ளனர்.  
Powered by Blogger.