இலங்கையில் மதிப்பீடுகளை மேற்கொள்ள தயாராகும் ஐரோப்பிய ஒன்றியக் குழு!

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை குறித்து மதிப்பீடு செய்யும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.


அதன்படி எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் இக்குழு இலங்கைக்கு விஜயம் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய குழுவொன்று இவ்வருடத்தின் நடுப்பகுதியிலும் இலங்கைக்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது.

குறித்த ஆய்வின் அடிப்படையிலான அறிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெறும் பயனாளி என்ற அடிப்படையில், மனித உரிமைகள், தொழிலாளர் உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட 27 சர்வதேச மரபுகளை திறம்பட செயல்படுத்துவதற்கு இலங்கை உறுதிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.