தேர்தல் களத்தில் குதிக்க தயாராகும் சர்ச்சைக்குரிய தேரர்?

மட்டக்களப்பு பௌத்த மடாலயமொன்றைப் பிரதிநித்துவப்படுத்தும் சர்ச்சைக்குரிய பௌத்த தேரர் ஒருவர் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறித்த தேரர் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுபான்மையின மக்களை இழிவுபடுத்தும் ஆக்ரோஷ‪ செயற்பாடுகளினாலும், சிறுபான்மையின அரச அதிகாரிகளை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிடுவது மாத்திரமன்றி பொலிஸாரோடு முரண்படுவதிலும் கடந்த காலங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சர்ச்சைக்குரிய தேரர் பெரும்பாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் குறித்த தகவலினை இதுவரையில் உறுதிப்படுத்த முடியவில்லை.  

No comments

Powered by Blogger.