ஜனாதிபதியின் நடவடிக்கையை நீதிமன்றத்தில் முறையிடுவோம்-கபீர் ஹாஷிம்

அரசியலமைப்பை மீறி ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக அடுத்த வாரம் நீதிமன்றத்தில் முறையிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.


இதுவரையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் தமக்கு உண்டு எனவும், அடுத்தவாரம் இதனை நிரூபித்துக் காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அலரிமாளிகையில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி என்பது எந்தவொரு தேர்தலுக்கும் முகம்கொடுக்க முடியுமான ஒரு கட்சி. ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு கட்சி. கடந்த காலத்தில் அரச பயங்கரவாதத்துக்கு உட்படுத்தப்பட்ட ஒரு கட்சி. அரச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலுக்கு முகம்கொடுத்த ஒரு கட்சி. நியாயமான ஒரு தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த நேரத்திலும் முகம்கொடுக்கலாம்.

இருப்பினும், திருட்டுத் தனமான தேர்தலுக்கு நாம் எதிரானவர்கள். சட்டத்துக்கு எப்போதும் நாம் தலை சாய்க்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.