நாடாளுமன்றக் கலைக்க ஆணைக்குழுவின் ஆலோசனை அவசியமில்லை – மஹிந்த

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னரே நான் அது தொடர்பில் அறிந்திருந்தேன், ஆனால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஆலோசனை பெற வேண்டிய தேவை இல்லை.

இதாவது அரசியல் யாப்பில் பொது தேர்தலுக்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்குமாறே கேட்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் பிரச்சினை இல்லை ஆகவே தேர்தலுக்கான சூழல் காணப்படுகின்றது. சுனாமி ஒன்று ஏப்பட்டால் அல்லது தேர்தல் காலங்களில் கொலைகள் இடம்பெற்றால், மழைபெய்யும் காலங்களில் குடையை கொண்டு செல்வது சிறந்தது.

எந்த நேரத்திலும் பொது தேர்தலையே எந்தவொரு தேர்தலையோ நடத்த ஆணைக்குழு தயாராகவுள்ளது.

நிலையில்லாத உலகத்தில் எதனையும் நிலையானது என கூறுவது கடினம். பொது தேர்தலுக்கு 4 அல்லது 5 கோடி ரூபா செலவாகும்” என அவர் தெரிவித்தார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  

No comments

Powered by Blogger.