அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார்–ஜே.வி.பி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பம் முதலே அரசியலமைப்பை மீறி செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல எதிர்பார்த்துள்ளோம்.

அத்துடன், ஜனாதிபதி ஆரம்பம் முதலே அரசியலமைப்பை மீறி செயற்பட்டு வருகின்றார்.

அடுத்த தேர்தலில் அவரது அரச அதிகாரத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நோக்கிலேயே அமைச்சரவை செல்லுபடியாகும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்படாத அதிகாரத்தின் மூலம் புதிய பிரதமரை நியமித்தார். புதிய அமைச்சரவையினை நியமித்தார்.

அவ்வாறே நேற்றிரவும் நாடாளுமன்றத்தை மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார். இது முற்றாக அரசியலமைப்புக்கு விரோதமானது“ என தெரிவித்துள்ளார்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net  #jvp  #அநுரகுமார திசாநாயக்க  #நாடாளுமன்றம் #ஜனாதிபதி  #மக்கள் விடுதலை முன்னணி #மைத்திரிபால சிறிசேன
Powered by Blogger.