3 எம்.பி.க்கள் ஸ்ரீ ல.சு.கட்சியிலிருந்து ஸ்ரீ ல.பொ.ஜ.பெ. வுக்கு"!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த வகையில், அனுராதபுர மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய டீ.வீ. சானக ஆகியோர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
இன்னும் பல ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினால் உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.