யாழில் குருதிக் கொடையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

யாழ்.குடாநாட்டில் ஓ நெகடிவ் வகை குருதி வகைக்கு கடந்த சில
தினங்களாகப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றமையால் குறித்த வகை குருதி தேவைப்படும் நோயாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து புற்றுநோய் வைத்தியசாலையும் செயற்பட்டு வருவதால் புற்றுநோயாளர்களுக்கு அதிகளவு குருதி தேவைப்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல் குழந்தைப் பேறுக்கு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தாய்மார்கள், தற்போது அதிகரித்துள்ள வீதி விபத்துக்களால் பாதிக்கப்படுபவர்கள் ஆகியோருக்கும் இவ்வகையான குருதி தேவைப்படுகின்றது. ஓ நெகடிவ் குருதி வகையைச் சேர்ந்த நோயாளர்களுக்கு வேறு எந்தவகையான குருதிகளையும் வழங்க முடியாதுள்ளது.

ஆகவே, ஓ நெகட்டிவ் குருதி வகையையுடைய குருதிக்கொடையாளர்கள் ஏற்கனவே குருதி வழங்கி நான்கு மாதங்கள் கடந்தால் தமது வசதிகளுக்கேற்றவாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை,தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் ஏதாவதொரு வைத்தியசாலைக்குச் சென்று குருதி தானம் வழங்குவதுடன், இந்த குருதி வகையைச் சேர்ந்தவர்கள் புதிதாகவும் முன்வந்து குருதி வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.

இதன் மூலம் உயிர் காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் கேட்டுள்ளார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Jaffna  #Blood

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.