கருணா திடீர் அறிவிப்பு ட்வீட்டர் கணக்கா??

2001ம் ஆண்டில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீதான
விடுதலைப்புலிகளின் தாக்குதல் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையிலயே நடத்தப்பட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

புலிகள் தலைமை, சில முக்கிய  இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் வெளிநாட்டு புலனாய்வுதுறைக்குமே தெரிந்த உண்மை இதுவென அவர் தெரிவித்துள்ளார்.  ஆனால் தற்போது ரணில் விக்ரமசிங்க புலிகளுடன் ஒருபோதும் ஒப்பந்தம் ஒன்றையும் செய்யவில்லை என கூறுகிறார் எனவும் கருணா என்றழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே அவரது டவிட்டர் பதிவு தொடர்பில் ஊடகங்கள் தொடர்புகொண்ட போது அதனை தான் இயக்கவில்லையென விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அவ்வகையில் குறித்த ட்விட்டர் கணக்கு அவர் இணைந்து செயற்பட்ட இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இயக்கப்படுகின்றதாவென சந்தேகம் எழுப்பபட்டுள்ளது.

முன்னதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை தானே மஹிந்த பக்கம் அழைத்து சென்றிருந்ததாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Batticola  #Karuna #Twitter #Muralitharan

No comments

Powered by Blogger.