பிரதி, இராஜாங்க அமைச்சுக்கள் செல்லுபடியற்றதா?
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவையும், ஏனைய பிரதி, இராஜாங்க அமைச்சர்களும் தொடர்ந்தும் தேர்தல் முடிவடையும் வரையில் அந்தப் பதவிகளில் பணியாற்ற முடியும் என சட்டத்துறை அமைப்புக்களின் ஒன்றிய ஏற்பாட்டாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின்படி இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 19 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின் படியும், 47 (1 மற்றும் 2) ஆகிய சட்டத்திலும் இதற்கான இடம்பாடு காணப்படுகின்றது எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் அமைச்சரவை தொடர்ந்தும் செயற்பட்டாலும், பிரதி, இராஜாங்க அமைச்சர்களின் நிலைப்பாடு என்னவென மக்களிடையே தற்பொழுது தெளிவில்லாத ஒரு நிலைமை உருவாகியுள்ளது. இது குறித்து சட்டத்தரணியிடம் வினவியதற்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை, நேற்று நள்ளிரவு அரச அச்சகத்துக்கு வருகை தந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தனவிடம் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினா எழுப்பினர். அதற்கு அவர்,
கபினட் அமைச்சர்கள் மட்டும் இருப்பார்கள். பிரதி மற்றும் இராஜாங்கம் ஆகிய அமைச்சர்களின் பதவிகள் செல்லுபடியற்றதாக மாறிவிடும். மக்களுக்கு வாக்களிக்கப்பட்டதுபோன்று சேவைகள் அவ்வாறே அமைச்சரவையினால் முன்னெடுக்கப்படும் எனவும் லக்ஷ்மன் யாபா எம்.பி. பதிலளித்துள்ளார்.
#sri-lanka-parliament #Tamilnews #Tamil #Srilanka #Colombo #Tamilarul.net #நாடாளுமன்றம் #ஜனாதிபதி #சட்டத்தரணி #மனோஜ் கமகே #லக்ஷ்மன் யாபா #ஊடகவியலாளர்கள் #கபினட்
கருத்துகள் இல்லை