கஜா புயல் பற்றிய வெளிப்பாடு!

ஆண்டின் தொடக்கப்பகுதியில் இலங்கையின் வடக்குக் கிழக்குப்பகுதிகளில் கடும்வரட்சி நிலவியது. இலங்கையின் பகுதிகள் மட்டுமன்றி
தென்னாசியவலய நாடுகள் பலதும் வரட்சியை எதிர்கொண்டன. உயர்வரட்சி நிலவும் பகுதிகளில் உயர் வெப்பநிலை ஏற்பட்டுள்ளது என்பதே அர்த்தமாகும்.இந்த உயரிய வெப்பநிலை காரணமாக உலகின் எதிர்பார்க்கப்படாத பல இடங்களில் தாழமுக்கமையங்கள் உருவாகி அவை சூறாவளி எனப்படும் புயலைத்தோற்றுவிக்கின்றன.
    சூறாவளியால் உலகின் பலபகுதிகள் தொடர்ச்சியாகப்பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேற்கிந்தியத்தீவுகளிலுள்ள கரீபியன் தீவுகள்; தென்சீனக்கடற்பகுதி ;ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப்பகுதி; பிலிப்பைன்ஸ்; யப்பான் ; தென்னாசிய நாடுகள் என புயலால் பாதிப்படையும் நாடுகள் ஏராளம்.
       புவியின் சரிவுத்தன்மையாலேயே பல்வேறு காரண காரியங்களோடு இந்தப்புயல் தோற்றம் பெறுகிறது.
அதாவது பூமி 23.5 பாகை சரிவு கொண்டு சுழல்வதன் காரணத்தால் பூமியின் ஒருபகுதி சூரிய ஒளியைப்பெறும்போது மறுபகுதி இருளடைகிறது. சூரியஒளிபடும் பகுதி வரட்சி அதிகரிப்பால் விரிவடைந்து மேலேழுகிறது. இதனால் அந்த இடத்தில் வெற்றிடம் ஒன்று உருவாகிறது. அதேவேளை இருள் கொண்ட பகுதி குளிராகவும் காற்றழுத்தம் கூடியதாகவும் காணப்படும். அந்தக்காற்றுக்கூடிய இருட்பகுதியில் இருந்து காற்றுக் குறைந்த வெப்பப் பகுதிக்கு காற்று வீசுகிறது. அந்தக்காற்று வீசும் வேகத்தைப்பொறுத்தும் சூறாவளியின் வேகம் கணிக்கப்படுகிறது.
        தற்போது வங்கக்கடற்பரப்பில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக வரட்சியால் பாதிப்படைந்து உயரமுக்க வலயங்களாய் திகழ்ந்த வடக்குக்கிழக்குப் பகுதிகளை நோக்கி சுமார் 100Km வேகத்தோடு  கஜே என்ற புயல் யாழ் குடாநாட்டை நோக்கி வருவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. யாழ்குடாவை மட்டுமன்றி மன்னார் புத்தளம் திருகோணமலை போன்ற மாவட்டங்களுக்கும் கரையோரப்பிரதேசங்களுக்கும் இலங்கை வளிமண்டலத் திணைக்களம் அபாய எச்சரிக்கை பிறப்பித்துள்ளது.
      தற்போதய சுற்றுச்சூழல் அவதானிப்புப்படி நல்லிரவு 1:48 மணியளவில் மாசிமாதத்தில் பொழியும் பனிபோல சுற்றுச் சூழல் பனிப்பொழிவால் நிரம்பியுள்ளது. இது சூறாவளி ஏற்படும் முன்னர் ஏற்படும் மூடுபனி என்பதை ஞாபகமூட்டுகிறது. அதேவேளை வானத்திலும் தொடர்ச்சியான மேகப்படலங்கள் நிறைந்துள்ளன. இதுவும் சூறாவளிக்கான அறிகுறியாகும். இந்தப்புயல் இரண்டு தொடக்கம் ஆறுநாட்கள்வரை நிலைகொள்ளும் இயல்புடையவை. இதனால் இடியுடன்கூடிய பெருமழையும் பொழியும் சாத்தியமுண்டு. பெருமழைகாரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். 2000mm இற்கு குறையாமல் மழைவீழ்ச்சி ஏற்படும்.
      இந்தப்புயலால் மின்சாரத்தடை  ஏற்பட வாய்ப்புள்ளது. மரங்கள் பாறின்டு விழலாம். உயிரழிவு சொத்தழிவுகள் ஏற்படலாம். கடந்துவரும் புயலால் ஆபத்தான தொற்று நோய்களும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமே.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija

No comments

Powered by Blogger.