கஜா புயல் குறித்து முதல்வர் எடப்பாடியிடம் விசாரித்தார் பிரதமர் மோடி!

கஜா புயலினால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார். மீட்புப் பணிகளுக்காக மத்திய அரசு உதவ தயாராக இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.


நேற்று நள்ளிரவு நாகப்பட்டினத்தில் அருகே கரையை கடந்த, கஜா புயல் தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்களை கடுமையாக சேதப்படுத்தியது. புயலின் மையம் கரையை கடந்த உடனேயே மீட்புப் பணிகளை தமிழக அரசு துவங்கி விட்டது. இதுவரை 28 பேர் புயலால் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு, நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு கஜா புயல் தாக்கத்தை பற்றி கேட்டறிந்தார். நிவாரண பணிகளுக்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், புயலில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.