முல்லைத்தீவில் காலநிலையால் 647-பேர் பாதிப்பு!

முல்லைத்தீவில் பெய்த தொடர்ச்சியாக கன மழையினால் இதுவரை 202 குடும்பங்களை சேர்ந்த 647-பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார்.


முல்லைத்தீவு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அடை மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஆறுகள் மற்றும் சிறிய குளங்கள் உடைப்பெடுத்திருந்தன. இம்மழையில் சிக்கி இதுவரை 202 குடும்பங்களை சேர்ந்த 647-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சில குடும்பங்கள் தற்காலிக இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். . அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகள் இலங்கை இராணுவத்தினர், விமானப்படையினர், கடற்படையினர் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், முல்லைத்தீவு நித்தகைக்குளம் பகுதில் நேற்று முன்தினம் வெள்ளம் உடைப்பெடுத்திருந்ததில் ஆறு பேர் காணமல்போயிருந்தனர். இதில் நேற்று மூன்று பேர், விமானப்படையினர் மற்றும் இரானுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Mullaithivu  #jaffna #Weather #Rubavthi-Ketheswaran #ரூபவதி கேதீஸ்வரன்
Powered by Blogger.