மதுபான விற்பனைசாலைகள் அமைக்க இடமளிக்க மாட்டேன் -ராஜமணி

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மதுபான விற்பனைசாலைகள் அமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என தெரிவித்த கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத் சமூகத்தை சீரழிக்கும் வகையில் மதுபானசாலைகள் மற்றும் ஏனைய
வியாபார நிலையங்கள் என்னை மீறி அமைக்கப்படுமேயானால் அவ் வியாபார நிலையங்களை தீயிட்டு கொளுத்தி சிறை வாசம் செல்லவும் தயாராகவுள்ளேன் என சூளுரைத்துள்ளார்.

கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தின் சாமஸ் பிரிவின் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 35 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மைதானம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் தவிசாளர் ராஜமணி பிரசாத் தலைமையில் அன்று  வியாழக்கிழமை இடம்பெற்றது.

கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களை சமூக சீர்கேடான விடயங்களுக்கு ஒரு காலமும் இடமளிக்கமாட்டேன். என்றும் கொட்டகலை பிரதேச சபையின் தலைவராக இருக்கும் காலப்பகுதியில் எந்தவொரு தீய செயலுக்கும் இடமளிக்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூரண ஒத்துழைப்புடனும், மக்களுடைய ஒத்துழைப்புடனும் எதிர்காலத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை இப்பகுதியில் செய்து முடிப்பேன் என கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.

#Tamil   #Tamilnews  #Srilanka   #Jaffna  #Tamilarul.net   #News  #prasath #rajamani
Powered by Blogger.