சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சபாநாயகர் கரு ஜெயசூரியவின்
நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக தேர்தலை நடத்துமாறும், மக்களின் உரிமையை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிராக இதன்போது கோசங்கள் எழுப்பப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மாத்தளை பிரதேச சபை தலைவர் கபில பண்டார கேன்தெனிய, உறுப்பினர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.