சீனாவில் இரசாயன தொழிற்சாலை அருகே குண்டுவெடிப்பு – 22 பேர் உயிரிழப்பு

வடக்கு சீனாவின் ஹிபேய் மாகாணத்தில் இரசாயன தொழிற்சாலை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடுமையாகப் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 38 லொரிகள், 12 கார்கள் தீக்கிரையாகின. வாகனங்களில் இருந்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 22 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குண்டுவெடிப்பா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

#Tamil   #Tamilnews  #china  #boom #Tamilarul.net   #News

Powered by Blogger.