சபாநாயகரிற்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு!

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்றுக் கொண்டு சில தினங்களுக்குள் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டமை தொடர்பில்

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினரால் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

சில தினங்களுக்குள் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை மாற்ற கொண்டமைக்கான காரணத்தை விளக்குமாறு முறைப்பாட்டில் உள்ளடக்கியுள்ளதாகவும் பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

1994, 20 இலஞ்சம் தொடர்பான சட்டத்தின் 70 வது பந்திக்கு அமைய ரணில் விக்கிரமசிங்கவுக்கு பக்க சார்பாக செயற்பட்டுள்ளதன் மூலம் கரு ஜயசூரிய, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட கூடிய குற்றத்தை செய்துள்ளதாக திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்விப் பிரிவின் தலைவர் விரிவுரையாளர் ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.