நாடாளுமன்ற பார்வைக் கூடத்திற்கு ஊடகவியலாளர்கள் மாத்திரமே அனுமதி

 நாடாளுமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை)  மீண்டும் கூடவுள்ள நிலையில். நாளைய அமர்வின்போதும் பொதுமக்களுக்கான பார்வை கூடமும் சபாநாயகர் விசேட விருந்தினருக்கான பார்வை கூடமும் மூடப்படவுள்ளன.


இந்த தகவலை நாடாளுமன்ற படைக்கள சேவிதர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பார்வைக் கூடத்திற்கு ஊடகவியலாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும்  அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில், நாடாளுமன்றம் மீண்டும் நாளை  கூடவுள்ளது. நாளைய அமர்வு நேரத்தின்போது நாடாளுமன்ற வளாகம் மற்றும் கட்டடத்தொகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் கடந்த 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் ஆளும் எதிர்த்தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து இந்ந நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்தோடு இறுதியாக இடம்பெற்ற இரண்டு நாடாளுமன்ற அமர்வின் போதும் மேற்குறிப்பிட்டவர்களுக்கான பார்வைக்கூடங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.