போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பொன்னகர் மாணவர்களுக்கான கற்றல் உதவிகள்(படங்கள்)

 நாவற்குழி வெண்ணையன்கட்டு வீரபத்திரர் ஆலய இந்து இளைஞர் மன்றம் மற்றும் நாவற்குழி இளைஞர்களும் இணைந்து போரால் பாதிக்கப்பட்ட
கிளிநொச்சி பொன்னகர் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டி என்பன கையளிக்கும் நிகழ்ச்சி 09.11.2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பொன்னகர் கிராம அலுவலர் அலுவலகத்தில் நாவற்குழி வெண்ணையன்கட்டு வீரபத்திரர் ஆலய இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் தலைமையில் இடம்பெற்றது.
போரினால் கடுமையாகப்பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும், நெடுந்தூரம் நடந்தே கல்வி கற்கச்செல்லும் திறமையான வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவனுக்கான துவிச்சக்கர வண்டியுமே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான அனுசரணையினை நாவற்குழியைச்சேர்ந்த கனடாவில் வசிக்கும் வல்லிபுரம் நிதி அவர்களால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நாவற்குழி வெண்ணையன்கட்டு வீரபத்திரர் ஆலய இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், கே/ 07 பொன்னகர் கிராம அலுவலர் மற்றும் கபிலன் கதிர்காமநாதன் (மாற்றத்துக்கான மையம்) நாவற்குழி இளைஞர்கள், மற்றும் பயனாளிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net   #ponnagar  #kilinochchi

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.