பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவியுங்கள் - விஜய் சேதுபதி

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நெடுநாட்களாக சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தது தமிழக அமைச்சரவை. ஆனால், அமைச்சரவையின் இந்த பரிந்துரையானது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.அதே சமயம், கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான அதிமுகவினர் மூன்று பேரை அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் விடுவித்துள்ளது சிறைத்துறை. சுமார் 3 மருத்துவ மாணவிகளின் உயிரை பறித்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தங்களது கட்சியினர் என்ற முறையில் கருணை காட்டும் அரசு 7 பேர் விடுதலை விவகாரத்தில் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான விஜய் சேதுபதி, "இது தமிழர் பிரச்னை மட்டும் அல்ல ; மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநர் பரிசீலிக்க வேண்டும்" என தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, மதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் சார்பில் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி டிசம்பர் 3 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.