அங்கம் தளர்ந்தாலும் நெஞ்சம் தளரோம்.!

03-12-2018 இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் என்பது அனைவரும் அறிந்த விடையம். ஆனால் இன்று அது தொடர்பாக ஒரு நிகழ்வு நடை பெற்றது அதில் நானும் கலந்து கொண்ட சில பதிவுகளை பகிர்ந்திருந்தேன். அதனை உறவுகள் பார்த்திருப்பயள். இன்று பல உறவுகள் கூறிய வார்த்தை இன்றைய நிகழ்வு எமக்கவா? அல்லது சில அதிகாரிகளுக்கவா? என வேதனை அடைந்தோம்.


நான்,கங்கேஸ்வரன்,கவிதா போன்றவர்கள் சக்கர நாட்காலியில் அதிதிகள் பின் வரிசையில் எம்மை அழைத்து சென்ற நிகழ்வின் ஏற்பாட்டாளரால் அமர்த்தப்பட்டோம். அதன் பின் பல அதிகாரிகள் எம்மை வெளியில் நிர்க்குமாறு பல தடவை கூறினார்கள். நாமும் இறுதியில் வெளியேற முனைந்தோம். அப்போது. ஒரு அதிகாரி அவர்கள் இருக்கட்டும் விடுங்கள் என கூறினார். அதன் பின் நாங்கள் வெளியில் வந்தோம்.

இங்கு நான் சுட்டிக் காட்டுவது இன்றைய  தினம் எமக்கானது. எமது உரிமைகளும் எமத தேவைகளையும்  நாமாக செய்வதற்கும். எமது சுய மரியாதையை காப்பாற்றுவதற்கும் உலக நாடுகளால் அங்கிகெரிக்கப்பட்ட நாளே இன்று. அதற்கு ஏற்ப நிகழ்வுகள் கிழக்கு மாகாணம் சார்ந்து மட்டக்களப்பு மாற்ற்றுத்திறனாளிகள் ஒன்றியம் பல தனியார் நிறுவனங்கள், சமூக சேவைகள் தினைக்களம் போன்றவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.  அங்கு செல்லும் வரை எமக்கான நிகழ்வாக இருக்கும் என தீர்மானித்தே சென்றோம் அங்கு சென்றதும் எமக்கு அல்ல அது பெரியவர்களுக்கான நிகழ்வு என அறிந்தோம்.

எம்மை வெறுமனே ஆள் கணக்காகவே அழைத்திருந்தார்கள்.  அதை விட அவமானம் எமது மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகளின் சம்மேளனம் என எம்மால் உருவாக்கப்பட்டு பலரது உழைப்பிற்கு மத்தியில் தலை நிமிர்ந்து நின்ற இந்த அமைப்பின் கொடியினை ஏற்றுவதற்கு கூட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மளனத்தின் தலைவருக்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. தலைவர் ஜீவராஜா ( நேதாஸ் ) ஐயா அவர்களே தயவு செய்து பயனாளிகளை கஸ்ரத்தின் மத்தியில் அழைத்து அவமானப்படுத்தாதீர்கள்.  உங்களால் செய்ய இயலாவிட்டால் விட்டு விலகுங்கள் இதற்காக உழைத்தவர்கள் பலர் அதனை மீண்டும் கட்டி வழப்பதற்கு உறுதுணையாக இருப்பார்கள்.

மீண்டும் சுட்டிக்காட்டுகின்றேன் தயவு செய்து எம்மை விளம்பர முடவர்களாக உங்கள் சுய நலத்திற்காக பயன் படுத்தாதீர்கள். மிகவும் வேதனை தருகிறது. எமக்காக பல உரிமைகள் உள்ளது. ஆனால் சில அரச அதிகாரிகள் எம்மை தங்களின் தேவைக்காக கையாளுவதை விட்டு விடுங்கள்.  ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இவ்வாறு ஒன்று பட்டு எமக்கு பல தேவைகளை அடைவதற்கு நான் குரல் கொடுத்த போதெல்லாம் நீங்கள் என்னை முதிகில் குத்தி புலம்பெயர் உறவுகளிடமும் எம்மோடு பயணித்த சக உறவுகளுடனும் பகமையை வழர்த்து இன்று மாவட்ட ஒன்றியத்தையும் இல்லாது செய்வதற்கே பல வேலைகளை முன்நெடுக்கும் அரச சில அதிகாரிகள் நிறுத்துங்கள்.

அங்கம் தழர்ந்தாலும் நெஞ்சம் தாளரோம். எம்மை கூப்பிட்டு வைத்து அவமானப் படுத்துவதனை நீங்கள் செய்கின்ற போது அவமானப் படப்போவது நீங்களே. பல ரூபா நிதி திரட்டி நிகழ்வை செய்யும் நீங்கள் ஒரு அனுகும் வசதி கொண்ட கட்டிடமாவது உங்களுக்கு கிடைக்கவில்லையா??? ஆளுனர் அவர்களை அழைத்ததை விட. எமக்கு கொஞ்சம் வசதி உடைய கட்டிடத்தை ஒழுங்கு செய்திருக்கலாம். காலையில் போன சலம் மீண்டும் வீடு வரும் வரை தாங்க முடியவில்லை. இதுவா எங்கள் உரிமை?? எம்மை வைத்து தயவு செய்து பிழைக்காதீர்கள். அதனை விட மாவட்ட ஒன்றியத்தின் தலைவர் அவர்களே நீங்கள் நீங்களாக முடிவெடுங்கள் அவை எமக்கு பலன் தருவதாக இருக்கவேண்டும். அதிதிகளுக்கு பிற அரச உத்தியோகஸ்த்தர்களை வைத்து மாலை அணிவிக்க தீர்மானித்த அதிகாரிகளே ஏன் அவர்களை வைத்து நிகழ்வை செய்திருக்கலாம்தானே.

மனிதனாகவே மதிக்க தெரியாத நீங்களா எம்மை மாற்றுத்திறனாளியாக மதிக்க போகிறயள். தலைவர் கூறுகிறார் கடசிவரை தான் கொடி ஏற்றுவது என இருந்தாராம். ஆனால் அதற்கும் இடம் கிடைக்கவில்லை என. என்ன கொடுமை சரவணா என அழவேண்டும்போல் நீங்கள் நினைக்கலாம் ஆனால் ஆழமாக சிந்தியுங்கள் இனியாவது.

நிகழ்வில் ஒரு சகோதரி பேசினார் மாற்றுத்திறனாளிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களை நாம் அன்போடும் உரிமையோடும் ஆதரிக்க வேண்டும் என. சகோதரி அவர்களே நீங்கள்தான் எம்மை வெளியில் செல்லும்படி கூறியது மேடை ஏறி மைக் பிடித்ததும் மாறிற்றயளே. இவைகளை கூறினால் நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். சுட்டிக்காட்டுவது நான் சுட்டுவது நீங்கள்.

மீண்டும் கடந்த கால விளையாட்டு நிகழ்வும் வாழ்வாதார பயனாளி தேர்வும். விளையாட்டுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் இவைகள் ஏன்?? எதற்காக??? தொடரும் சுட்டிக்காட்டல்.

நன்றி.!

தாமோதரம் குகதாஸ்.

No comments

Powered by Blogger.