'தலைவர் குத்து’ - பேட்ட முதல் பாடல்!

பேட்ட திரைப்படத்தின் முதல் பாடலை ரிலீஸ் செய்ய தயாராகிவிட்டது படக்குழு. அனிருத் இசையமைத்துள்ள ‘தலைவர் குத்து’ என்ற பாடலை இன்று(03.12.18) மாலை ஆறு மணிக்கு ரிலீஸ் செய்வதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.


தலைவர் குத்து பாடலின் மேக்கிங் வீடியோவையும் தங்களது அறிவிப்புடன் சேர்த்து வெளியிட்டு, ஆறு மணி நேரம் காத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறார்கள்.பறை மேளம் முதல் பேண்ட் மேளம் வரை அத்தனை இசைக்கருவிகளையும் வைத்து இந்தப் பாடலுக்கான இசையை உருவாக்கியிருக்கிறார் அனிருத். கம்ப்யூட்டர் மூலம் இசையை உருவாக்காமல், இசைக்கருவிகளிலிருந்து வரும் இயற்கையான இசையை, கம்ப்யூட்டர் உதவியுடன் மெருகேற்றுவது அனிருத்தின் சிறப்புகளில் ஒன்று. இந்தப் பாடலுக்கு அவ்வாறே இசையமைத்து அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறார்.

No comments

Powered by Blogger.