விநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது
விநாயகர் சதுர்த்தியன்று எக்காரணத்தைக்
கொண்டும் சந்திரனை பார்க்கக்கூடாது என்று பெரியோர்கள் கூறுவார்கள். காரணம் தெரியாமலே நாம் அதனைப் பின்பற்றுவோம். அதற்கு ஒரு காரணம் உண்டு.
அரிசி மாவினால் செய்த இனிப்பைக் கொண்ட கொழுக்கட்டை விநாயகருக்கு ரொம்ப பிடிக்கும். அதாவது பிறந்தநாளின் போது அவர் வீடு, வீடாக சென்று கொழுக்கட்டைகளை பெற்றுக்கொண்டிருந்தார்.
அதிகமாக இவற்றை சாப்பிட்டுவிட்டு இரவில் அவர் எலியின் மீது அமர்ந்து பவனி வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு பாம்பை பார்த்து எலி பயந்துவிட்டது. அதனால் விநாயகர் கீழே விழுந்துவிட்டார். அவரது வயிறு கிழிந்து கொழுக்கட்டைகள் வெளியே வந்தன. அவற்றை மீண்டும் விநாயகர் தன் வயிற்றுக்குள் திணித்தார். அந்த பாம்பை தன் வயிற்றை சுற்றி கட்டிக்கொண்டார்.
ஆகாயத்தில் இருந்து இதை பார்த்துக்கொண்டு இருந்த சந்திரன் கலகலவென சிரித்து விட்டார். இதை பார்த்து கோபம் கொண்ட விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அதை சந்திரனை நோக்கி எறிந்தார். அத்துடன் விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை யாரும் பார்க்க கூடாது என்று சபித்தார்.
அப்படி அவர்கள் பார்த்தால் அவர்கள் இகழ்ச்சியையும், பாவத்தையும் அடைவர். தவறாக எவராவது பார்த்து விட்டால் அதற்கு பிராயச்சித்தமாக ஸ்ரீமத்பாகவத்தில் சயமந்த கமணியை ஸ்ரீகிருஷ்ணர் திரும்ப பெற்றார் என்ற கதையை அவர்கள் கேட்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
இந்த சாரத்தின் வெளிப்பாடே இன்றும் நாம் இந்த விடயத்தை பின்பற்றுவதற்கு காரணமாகும்.
கருத்துகள் இல்லை