உலகளவில் வேகமாக வளரும் தமிழக நகரங்கள்

உலகளவில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் திருப்பூர் 6வது
இடத்தைப் பெற்றுள்ளது.
உலகளவில் வேகமாக வளரும் நகரங்கள் பற்றி ஆக்ஸ்ஃபோர்ட் பொருளாதார ஆய்வு ஒன்றை நடத்தியது. 2019ஆம் ஆண்டு முதல் 2035ஆம் ஆண்டு வரை திருப்பூரின் சராசரி வளர்ச்சி விகிதம் 8.36 சதவிகிதமாக இருக்கும் என இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. வேகமாக வளரும் முதல் 10 நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் திருச்சி, திருப்பூர், சென்னை ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
திருப்பூரின் இந்த வளர்ச்சிக்குக் காரணம் ஆடை உற்பத்தித் தொழில்தான் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சியாகக் கூட இல்லாத கிராமமாகத்தான் திருப்பூர் இருந்தது. இன்று உலகளவில் வளர்ச்சி பெறும் நிலையை அந்நகரம் எட்டியதற்கு ஆடை உற்பத்தி, ஆடை ஏற்றுமதி ஆகிய தொழில்களே முக்கியக் காரணம்.
சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அரசிடமிருந்து ஆதரவு இல்லாதபோதும், தொழிலின் வாயிலாக பொருளாதார வளர்ச்சி கிட்டியுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து வேலை தேடி வருவோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நகரமாகவும் திருப்பூர் உள்ளது. ஏற்றுமதி வாயிலாக ஏராளமான அந்நியச் செலாவணியை அள்ளிக் குவிக்கும் நகரமாகவும் திருப்பூர் பெயர் பெற்றுள்ளது

No comments

Powered by Blogger.