ஆஸ்திரேலியாவின் வாய்ப்பு பிரகாசமாக

6 விக்கெட்டுகளைக் கொண்டு ஒரு
நாளில் 219 ரன்களை எடுக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது ஆஸ்திரேலிய அணி.
இந்தியாவின் தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா இதுவரை எதிர்தாக்குதலில் இறங்கவில்லை. நான்காவது விக்கெட்டை வீழ்த்தி நெருக்கடியான நிலைக்கு ஆளாக்கப்பட்ட பிறகு வீசப்பட்ட 12 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறது மார்ஷ்-ஹெட் ஜோடி. ஒவ்வொரு நாள் முடியும்போதும் ஆஸ்திரேலிய அணிக்கான வாய்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருந்துவருகிறது. அதனை எப்படி இந்தியா முறியடிக்கிறது என்பதே ஒவ்வொரு நாளின் சுவாரசியமாகவும் இருந்து வந்தது. நாளை கடைசி தினம். இதில் ஆஸ்திரேலியா என்ன செய்கிறது என்பது தான் வெற்றியைத் தீர்மானிக்கும்.
நாளை காலை களத்துக்கு வரவிருக்கும் வீரர்களுக்கு சமமாக, புதிதாக வீசப்படும் பந்தும் கணிசமான பாதிப்பினை ஏற்படுத்தும். முதல் முப்பது ஓவர்கள் வரையிலும் மிடில் ஆர்டரின் விக்கெட்டுகளைக் காப்பாற்றிவிட்டால் ஆஸ்திரேலியாவின் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆனால், மார்ஷ் - ஹெட் ஆகிய இருவரில் ஒருவர் தொடக்கத்திலேயே ஏமாற்றினாலும் வெற்றி வாய்ப்பின் பக்கத்தில் வரவேண்டிய ஆச்சர்யக் குறி, கேள்விக்குறியாகிவிடும்
Powered by Blogger.