லெப் கேணல் மதி அண்ணையின் 30 வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

மல்லாகத்தில “பீடி பாலா” எண்டால்
தான் எல்லோருக்கும் இவரை தெரியும். அதை விட எல்லோரும் அண்ணார்ந்து பார்த்து கதை சொல்லுமளவிக்கு நெடிய உருவம் கொண்டவர் தான் மதியண்ணை.
விடுதலைப்புலிகளின் முதலாவது பயிற்சி பாசறைக்கு இந்தியா அனுப்பப்பட்டார்.அங்கு வைத்தும் புகைபிடித்தல் பழக்கத்தால் கிட்டண்ணையிடம் கடும் தண்டனையும் பெற்றார்.

அதன் பின்னர் தனது புகைபழக்கத்தை கைவிட்ட மதி அண்ணை தனது மரணம் வரை அதை தொட்டதே இல்லை.பயிற்சி முடிவடைந்ததன் பின்னர் தாயகம் திரும்பி கிட்டண்ணையின் கீழ் பணியாற்றினார்.இவர் உறுப்பினரான பின் இவரது ஒழுக்கத்தினாலும் மக்களின் அரவணைப்பினாலும் தெல்லிப்பளை பிரதேசத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் வலிகாமத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போது அவருக்கு வழங்கப்பட்ட (மஞ்சள் டெலிக்காவாகனம்)இப்பத்தே ஹையஸ் வாகனப்போல அதில் கம்பீரமாக சுற்றி திரிந்து தனது பணியை செய்தார்.
இந்திய இராணுவ வருகைக்கு பின்னர் போர் உக்கிரம் அடைந்தது.அந்த நேரத்தில் தளபதியாக இருந்த ஒரு சிலர் ஆயுதங்களை எறிந்து விட்டு லண்டனுக்கு தப்பி சென்றனர்.அந்த நேரத்தில் மதியண்ணையின் போர்குணமும்,அவரின் ஆளுமையும் தலைவர் அவர்களால் யாழ்மாவட்ட தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.

இந்திய இராணுவத்தினருடான உக்கிர போரினால் சீர்குலைந்திருந்த போராளிகளை மீளவும் ஒழுங்கமைத்து மிகவும் கட்டுக்கோப்பாக்கி இந்தியராணுவத்திற்கு எதிரான போரை வழி நடத்தினார்.

10.12.1988 இதே நாளின் போது துரோகியின் காட்டி கொடுப்பினால் சுற்றி வளைக்கப்பட்ட நேரம் கடும் தாக்குதலை நடத்தி முடியாது போக தான் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதற்காக தன்னை தானே சுட்டு தாயகமண்ணை முத்தமட்டார் இந்த வீரத்தளபதி..😭

(தமிழனின் போரியல் வரலாற்றில் பல பீடி பாலாக்களை ஒழுக்க சீலர்களாக மாற்றி போர் தளபதிகளாக மாற்றிய வரலாறு எம் தேசிய தலைவரையே சாரும்..)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.