யாருடன் கூட்டணி அமைத்தாலும் மைத்திரியே தலைவர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏனைய
அரசியல் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்தால் அதன் தலைமைத்துவத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்றுக் கொள்வார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினது தற்போதைய அரசியல் குழப்பநிலைகள் தொடர்பில் சுதந்திர கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இணைந்து அமைக்க உத்தேசித்துள்ள கூட்டணி தொடர்பில் இரு தரப்பினராலும் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்ததன் அடிப்படையிலேயே அவரைப் பிரதமராக நியமித்தார்.
நாட்டில் சகல அதிகாரங்களும் மிக்கவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணப்படுகின்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.