ஸ்டார் கிட் சேலஞ்ச்: வெற்றி யாருக்கு?
நட்சத்திர நடிகர்களாக இருப்பதில்
மகிழ்ச்சியும் உண்டு, அதேசமயம் கவலையும் உண்டு. முக்கியமாக அவர்களும் நடிப்புத் துறையைத் தேர்ந்தெடுத்தால் அந்த அழுத்தம் அதிகமாகும். தற்போது அந்த அழுத்தத்தில் சிக்கியிருப்பவர் சாயிப் அலி கான் - அம்ரிதா ஆகியோரின் மகள் சாரா அலி கான்.
சாரா அறிமுகமாகியுள்ள முதல் திரைப்படமான கேதர்நாத் வெள்ளிக்கிழமை (07.12.18) ரிலீஸானது. ட்ரெய்லரில் உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் அழகான காதல் கதையும், அதற்கேற்ற குறும்புத்தனமான நடிப்பும் எனப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சாராவின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டாலும், படத்தில் காட்டப்பட்ட காதல் அவ்வளவாக ஈர்க்கவில்லை என விமர்சனங்கள் வெளியாகின்றன.

படம் ரிலீஸான அன்று இந்தப் படத்துக்குக் கிடைத்த வசூல் 7 கோடியே 25 லட்ச ரூபாய் என்பது பாலிவுட் நிலவரம். சாரா அலி கான் அறிமுகமாகிவிட்டதால், தற்போது திரையில் அவருக்குப் போட்டியாளராக இருக்கும் ஜான்வி கபூரின் அறிமுகப் படத்தையும் இதையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.
ஜான்வி அறிமுகமான தடக் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 8 கோடியே 71 லட்சம். ஆனால், சாராவின் படமான கேதர்நாத் 7.25 கோடி என்பதால் அறிமுகப் படத்தில் வென்றவராக ஜான்வியை முன்வைத்துக் கொண்டாடுகிறது பாலிவுட் திரையுலகம்.
கருத்துகள் இல்லை