திருநங்கைகள் புதிய வேண்டுகோள்!

அரசு வேலைகளில் மூன்றாம்
பாலினத்தவர்களுக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து வரும் டிசம்பர் 17ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
அரசு வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக இட ஒதுக்கீடும், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதேபோல, மூன்றாம் பாலினத்தவருக்கும் சிறப்பு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த திருநங்கை சுதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று (டிசம்பர் 10) நீதிபதி விமலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் 20 சதவிகித மூன்றாம் பாலினத்தவர்கள் 10ஆம் வகுப்பு முடித்துள்ளதாகவும், 40 சதவிகிதத்தினர் பட்டப் படிப்பு முடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. அரசு வேலைகளில் அவர்களுக்கும் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு வேலைகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பும் வாதத்தின்போது மேற்கோள் காட்டப்பட்டது.

No comments

Powered by Blogger.