இனி ரயிலை கூகுளில் பிடிக்கலாம்

இந்தியா மிகப்பெரிய ரயில்
சேவையைக் கொண்ட நாடு. பெரும்பகுதி மக்களின் போக்குவரத்து சாதனமாக ரயில் இருந்துவருகிறது. இந்த சேவையின் தரத்தைப் பெருக்கத் தேவையான முயற்சிகளை அரசாங்கம் எடுத்துவந்தாலும், நாட்டில் தொழில் நடத்தும் நிறுவனங்களும் அதற்கான வேலையில் இறங்க அழைக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாகவே இலவச இணைய வசதி முக்கிய இரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு இணையத்தை அடிப்படையாகக் கொண்டு பல ரயில் சேவை அப்ளிகேஷன்களை உருவாக்குவதில் சில நிறுவனங்கள் ஈடுபட்டன. அப்படித் தொடங்கப்பட்டு முன்னிலையில் இருக்கும் நிறுவனம் தான் ‘Where is my Train’. நாம் முன்பதிவு செய்த ரயில் எங்கே இருக்கிறது என்பதையும், நாம் செல்ல வேண்டிய தடத்தில் என்னென்ன ரயில்கள் இயங்குகின்றன என்பதையும், அவற்றின் டிக்கெட் விலை குறித்தும், நாம் புக் செய்த டிக்கெட்டின் சீட் எந்த இடத்தில் வருகிறது என்பதையும் இணைய வசதி இல்லாமலேயே ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 8 இந்திய மொழிகளில் கண்டுபிடிக்க உதவுகிறது Where is my Train அப்ளிகேஷன். வெறும் 10 பேர் கொண்ட குழுவினால் உருவாக்கப்பட்டு ஒரு கோடி மக்களால் இதுவரை டவுன்லோடு செய்யப்பட்டிருக்கும் இந்த அப்ளிகேஷனை தற்போது கூகுள் வாங்கியிருக்கிறது. 50 கோடி வரையிலும் இந்த வியாபாரம் நடைபெற்றிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கூகுளின் ‘அடுத்த பில்லியன் யூசர்’ என்ற திட்டத்தின் விரிவாக்கமாகவே இதனைக் காணவேண்டியதிருக்கிறது. கூகுள் ஏற்கனவே ரயில் சேவைக்கான தகவல்களைக் கொடுத்தாலும், Where is my Train அப்ளிகேஷனை வாங்குவதன் மூலமாக மேலும் பல கோடி மக்களை எளிதாக தங்களது வாடிக்கையாளர்களாக மாற்றலாம் என நினைக்கிறது கூகுள்.
இந்தியா மிகப்பெரிய ரயில் சேவையைக் கொண்ட நாடு. பெரும்பகுதி மக்களின் போக்குவரத்து சாதனமாக ரயில் இருந்துவருகிறது. இந்த சேவையின் தரத்தைப் பெருக்கத் தேவையான முயற்சிகளை அரசாங்கம் எடுத்துவந்தாலும், நாட்டில் தொழில் நடத்தும் நிறுவனங்களும் அதற்கான வேலையில் இறங்க அழைக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாகவே இலவச இணைய வசதி முக்கிய இரயில் நிலையங்களில் தொடங்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு இணையத்தை அடிப்படையாகக் கொண்டு பல ரயில் சேவை அப்ளிகேஷன்களை உருவாக்குவதில் சில நிறுவனங்கள் ஈடுபட்டன. அப்படித் தொடங்கப்பட்டு முன்னிலையில் இருக்கும் நிறுவனம் தான் ‘Where is my Train’.
நாம் முன்பதிவு செய்த ரயில் எங்கே இருக்கிறது என்பதையும், நாம் செல்ல வேண்டிய தடத்தில் என்னென்ன ரயில்கள் இயங்குகின்றன என்பதையும், அவற்றின் டிக்கெட் விலை குறித்தும், நாம் புக் செய்த டிக்கெட்டின் சீட் எந்த இடத்தில் வருகிறது என்பதையும் இணைய வசதி இல்லாமலேயே ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 8 இந்திய மொழிகளில் கண்டுபிடிக்க உதவுகிறது Where is my Train அப்ளிகேஷன். வெறும் 10 பேர் கொண்ட குழுவினால் உருவாக்கப்பட்டு ஒரு கோடி மக்களால் இதுவரை டவுன்லோடு செய்யப்பட்டிருக்கும் இந்த அப்ளிகேஷனை தற்போது கூகுள் வாங்கியிருக்கிறது.
50 கோடி வரையிலும் இந்த வியாபாரம் நடைபெற்றிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கூகுளின் ‘அடுத்த பில்லியன் யூசர்’ என்ற திட்டத்தின் விரிவாக்கமாகவே இதனைக் காணவேண்டியதிருக்கிறது.
கூகுள் ஏற்கனவே ரயில் சேவைக்கான தகவல்களைக் கொடுத்தாலும், Where is my Train அப்ளிகேஷனை வாங்குவதன் மூலமாக மேலும் பல கோடி மக்களை எளிதாக தங்களது வாடிக்கையாளர்களாக மாற்றலாம் என நினைக்கிறது கூகுள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.