யாழில் பிரசித்தி பெற்ற வைத்திய நிபுணர் உயிரிழந்தார்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின், வைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி இன்று
அதிகாலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அதிகாலை 2.30 மணியளவில் இணுவிலில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பேற்படுத்தியிருந்தார். உடனடியாக நோயாளர் காவு வண்டி அவரது வீட்டுக் சென்றது. நோயாளர் காவு வண்டியில் அவர் ஏறி உட்கார்ந்த பின்னர் சுயநினைவிழந்து விட்டார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சையளித்த போதும், அவரை காப்பாற்ற முடியவில்லையென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய போது, நோயாளர்கள், வைத்தியசாலை பணியாளர்களின் பெருமதிப்பை ரகுபதி பெற்றிருந்தார். நோயாளர்களின் நலனில் அதிக அக்கறை செலுத்துபவர் இவர்.
முன்னர், முல்லைத்தீவு வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராகவும், வைத்திய நிபுணராகவும் கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.