கொடூரக்கொலை

யாருக்கும் தீங்கு செய்யாத மிருகம்
மன்னாரில் அடையாளம் கழுதை அதை அடித்து கொலை சொய்யும் அளவிற்கு அது செய்த குற்றம் என்ன..?

 வாயில் கடமையில்  இருந்த காவலார்களே குற்றவாளிகள்.

மன்னார் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்ததினால் இந்த இரண்டு ஜீவன்களும் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அறியக்கிடைத்துள்ளன.

 அடித்துக் கொன்றதும் இல்லாமல் தெரு வீதியிலே சடலங்களை போட்டிருக்கிறார்கள் வன்மையாக கண்டிக்க வேண்டிய விடயம் மிருகவதை அற்ப காரணத்துக்காக மனித மனங்கள் ஏன் இப்படி..?
இறைவன் படைப்பில் மேன்மையானவன் மனிதன் இதயமற்றவர்களாக இரங்கமற்றவர்களாக கொடூரம் மிக்கவர்களாகி வருவதை அவதானிக்க முடிகிறது.

வாகன சாரதிகள் சிலர் வாகனங்களை இயக்கி பயணிக்கும் போது குறுக்கே வரும் ஆடு மடு பூனை நாய் குரங்கு போன்றவை தவறுதலாக  அடி பட்டாலும் அதனை தகுந்த முறையில் எடுத்து ஓரமாக போடுவதோ அல்லது அடக்கம் சொய்வதோ கிடையாது அந்தப் பிணங்கள் அழுகி நாற்றம் எடுக்கும் வரையில் வீதிகளில் கிடைப்பதை அவதானிக்க முடிகிறது.

இது போன்ற  கொடூரச் செயல்களை கண்டிப்பதோடு நில்லாமல் மிருகங்கள் மட்டில் அக்கறையும் கரிசனையும் உள்ள மனிதர்களாக  ஒவ்வொரு மனங்களும் மாற சில விழிப்புணர்வு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியது எமது கடமை.

No comments

Powered by Blogger.