யாழில் பாரதியாரின் 136வது பிறந்த தின நிகழ்வு!

ஏற்பாட்டில் சுப்பிரமணிய பாரதியாரின்
136 ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வு துணைத் தூதுவர் எஸ் . பாலச்சந்திரன் தலைமையில் இன்று 11.12.2018 காலை 9 மணிக்கு நல்லூர் அரசடிச் சந்தியில் அமைந்துள்ள திருவுருவச் சிலையடியில் இடம்பெற்றது. நல்லூர் அரசடிச் சந்தியில் அமைந்துள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதுடன் இசையாசிரியர் வாசஸ்பதி குழுவினரின் பாரதியார் பாடல்களும் இசைக்கப் பட்டன . இந்நிகழ்வில் யாழ் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன். , யாழ்.அரச அதிபர் ந.வேதநாதன் , யாழ் மாநகர முதல்வர் ஆனோல்ட் உட்பட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.