ஆக்‌ஷன் மோடில் தொடரும் தன்ஷிகா

தன்ஷிகா கதாநாயகியாக பல படங்களில் நடித்திருந்தாலும் கபாலி
படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தது மிகுந்த வரவேற்பு பெற்றது. யோகி என்ற அவரது கதாபாத்திரம் சண்டைக்காட்சிகளிலும் ஈடுபட்டது. தற்போது தன்ஷிகா ‘யோகி டா’ என்ற தலைப்பில் புதிய படம் ஒன்றில் பிரதான கதாபாத்திரமாக நடித்துவருகிறார்.
உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டொலட்டியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கௌதம் கிருஷ்ணா. இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் தான் யோகி டா. தன்ஷிகா கபாலியில் நடித்ததைப் போல இந்த படத்திலும் அதிகளவில் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார். யோகி டா எனப் பெயரிடப்பட்டுள்ளது அந்த கதாபாத்திரத்தின் நீட்சியாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுவது இயல்பு தான். ஆனால் படக்குழு அந்த கதாபாத்திரத்திற்கு உருவான வரவேற்பைப் பயன்படுத்திக்கொள்ள டைட்டிலை மட்டும் அப்படியே அமைத்துக் கொண்டு முழுக்க புதிய ஆக்‌ஷன் கதையை உருவாக்கியுள்ளது.
இந்தப் படத்திற்காக தன்ஷிகா பாண்டியன் மாஸ்டரிடம் ஒன்றரை மாதம் சண்டைப் பயிற்சி கற்றுள்ளார். சிரஞ்சீவி, ஆர்யா, சூர்யா ஆகியோருக்கு பாண்டியன் சண்டைப் பயிற்சிகளை கற்றுக்கொடுத்துள்ளார். தன்ஷிகா பயிற்சியில் ஈடுபட்டபோது எடுத்த வீடியோவை விரைவில் படக்குழு வெளியிடவுள்ளது.
அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்த சிறுத்தை கணேஷ் இந்தப் படத்திலும் பணியாற்றுகிறார். கபீர் துஹன் சிங் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாயாஜி ஷிண்டே, மனோ பாலா, மாரிமுத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி இஸ்ராத் குவாத்ரே இசையமைப்பாளராகப் பணியாற்றுகிறார். இதன் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 10) கோயம்புத்தூரில் தொடங்கியுள்ளது.
கன்னட இயக்குநர் சுனில் குமார் இயக்கும் உடேகர்ஷா என்ற மும்மொழிப் படத்திலும் தன்ஷிகா நடித்து வருகிறார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த அந்தப் படத்திலும் டூப் போடாமல் ச

No comments

Powered by Blogger.