சரஸ்வதி முன்பள்ளியின் கலைவிழா

யாழ்ப்பாணம் கைதடி மேற்கு சரஸ்வதி முன்பள்ளியின் கலைவிழாவும், பரிசளிப்பு நிகழ்வும் கைதடி மேற்கு சரஸ்வதி கலை அரங்கில் நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் 2019 ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்லவுள்ள மாணவர்களும், கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
முகாமைத்துவக் குழு தலைவி திருமதி கெங்கேஸ் தயார்ணி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய தலைவர் ஞா.கிருபதீஷன், மக்கள் நலன் பேணும் நட்புறவுக் கழக தலைவர் ப.செல்லத்துரை, தென்மராட்சி வலயக் கல்வி முன்பள்ளிகளின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ச. அரியநாயகம் கவிராஜ், பயிற்சிப் பாடசாலை கு.டசீபன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.