ஜெயபுரம் கிராமத்தில் மாணவர்களின் கல்வி மேம்பாடு

நேற்றைய தினம் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று வருடங்கள் நான் கடமை புரிந்த பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜெயபுரம் கிராமத்தில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு அடுத்த ஆண்டிற்குரிய பாடசாலைக்கு தேவையான கொப்பிகள் வழங்கப்பட்டது.  இப்போதைய அபிவிருத்தி உத்தியோகத்தர் கேசவன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இவ்வுதவி செய்யப்பட்டது. தனது பிறந்த நாளான 11.12.2018 அன்று வட்டு யாழ்ப்பாணக் கல்லூரியின் எமது  2004 A/L அணியின் மாணவியான நிரோசினி கிருஷ்ணரூபன் இதற்கான நிதிப் பங்களிப்பை வழங்கியிருந்தார்.

No comments

Powered by Blogger.