1000 ரூபாவை பெற்றுக்கொடு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். என வலியுறுத்தி பாராளுமன்ற வளாக பகுதியில் இன்றைய தினம் தனிநபர் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தலவாக்கலையைச் சேர்ந்த கணேசன் உதயகுமார் என்பவரே இவ்வாறாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

எங்கள் இரத்தம் + எங்கள் கண்ணீர் + எங்கள் வியர்வை’ என எழுதப்பட்டிருந்த பதாதையை ஏந்தியவாறு – மிகவும் அமைதியான முறையில் இருமணிநேரம் போராட்டத்தை முன்னெடுத்தார்.


பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1 மணியளவில் கூடிய நிலையில் அவர் முற்பகல் 10.30 மணி முதல் 1.30 மணி வரை பாராளுமன்ற நுளைவாயிலுக்கு அருகில் அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.