அரசாங்கத்தின் தரப்பாக செயற்படப் போவதில்லை: மாவை

அரசாங்கத்தின் தரப்பாக ஒருபோதும் செயற்படப் போவதில்லை என்றும், தாம் எப்போதும் எதிர்க்கட்சியிலேயே செயற்படப் போவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு
கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து அரசாங்கம் மீள ஸ்தாபிக்கப்பட ஒத்துழைப்போம் என்று கடந்த நவம்பர் 29ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்ததை அவ்வாறே பின்பற்றுவோம் என்ற தமது நிலைப்பாடு குறித்த கடிதத்தை சபையில் சமர்ப்பித்த அவர், தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இக்கடிதத்தை ஹண்சாட்டில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மன்றை வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.