ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று கூடியபோது, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இப்பிரேரணையை சமர்ப்பித்தார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் என்ற ரீதியில் செயற்படுவதற்கு நாடாளுமன்றில் உயர் மட்டத்தில் தகுதி இருப்பதாக அறிவிக்கப்பட்டு இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அதனை விவாதத்திற்கு விட்டுள்ளதுடன் அவ்விடயம் தொடர்பில் வாக்கெடுப்பையும் நடத்தவுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வினையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியன புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.