ரஜினி: என்றென்றும் சூப்பர் ஸ்டார்


(12.12.2018) ரஜினிகாந்த்தின் பிறந்தநாள். 68 வயதை
நிறைவுசெய்யும் ரஜினியைப் பற்றிய சில தகவல்கள்:
1. 1975ஆம் ஆண்டில் வெளியான, இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களின் அபூர்வ ராகங்கள் படத்தில்தான் ரஜினிகாந்த அறிமுகமானார்.
2. முதன்முதலில் மூன்று வேடங்களில் ரஜினி நடித்த படம் மூன்று முகம்.
3. அனிமேஷன் பயன்படுத்தப்பட்ட முதல் தமிழ்ப் படம் ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா.
4. ரஜினி நடித்த முத்து திரைப்படம்தான், முதன்முதலில் ஜப்பானில் டப் செய்யப்பட்டு வெளியான படம்.
5. ரஜினியின் 150ஆவது திரைப்படம், படையப்பா.
6. ஐ.ஐ.எம்.மில் ஒரு கேஸ் ஸ்டடியாக எந்திரன் படம் இருக்கிறதாம்!
7. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் ரஜினி நடித்துள்ளார்.
8. 1984ஆம் ஆண்டில், தனது முதல் பிலிம்ஃபேர் விருதினை நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்திற்காகப் பெற்றார் ரஜினி.
9. இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண், 2000இல் ரஜினிக்கு வழங்கப்பட்டது.
10. ரஜினிகாந்த்தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். தாய்மொழி மராட்டி. ஆனால், இதுவரை மராட்டி மொழிப் படம் எதிலும் அவர் நடித்ததில்லை.
-ஆஸிஃபா

No comments

Powered by Blogger.