நெல்லை பழைய பேருந்து நிலையம் மூடல்!

நெல்லைச் சந்திப்பு பழைய பேருந்து
நிலையம் இன்றுடன் மூடப்படுகிறது.
75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நெல்லைப் பழைய(பெரியார்) பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 79 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்படவுள்ளது. புதிய பேருந்து நிலையத்தை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. மாற்று ஏற்பாடாக, பயணிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவிகளுக்காக 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தென்காசி டூ திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் நெல்லைச் சந்திப்பு பழைய பேருந்து நிலையம் செல்லாமல் அரவிந்த் மருத்துவமனை நிறுத்தம் அருகே நிறுத்துமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே பேருந்து நிலையத்திலுள்ள கடைகளை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று மதியத்துக்குள் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.இதனால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்குக் கால அவகாசம் வழங்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகை விற்பனையைக் கருத்தில்கொண்டு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதிவரை கால அவகாசம் வழங்க வேண்டுமென நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.