வவுனியாவில் 70ஆவது ஆண்டு மனித உரிமைகள் தின நிகழ்வுகள்


70ஆவது ஆண்டு மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா பிராந்திய மனித உரிமைகள் அலுவலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது மாணவர்களிடையே மனித உரிமைகள் என்பது பிறப்பிலிருந்து உருவாக்கப்படுகின்றனவா? அல்லது சலுகையிலிருந்து உருவாக்கப்படுகின்றனவா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக்கழக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் மற்றும் பீடாதிபதி பிரயோக விஞ்ஞானப்பீடம் சி. குகனேசன், வன்னிப்பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழவின் பொறுப்பதிகாரி எம். ஆர். பிரியதர்சன, வவுனியா பிராந்திய காரியாலய சட்டத்தரணி ஆர். எல். வசந்தராஜா, பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பல்கலைக்கழக வளாக மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.