அதிகாரத்திற்காக கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அடிபணிய தயாரில்லை


ஆட்சி அதிகாரத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அடிபணிய தயாரில்லை என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாகவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்ட ரீதியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்தால், ஜனாதிபதி கூறியபடி தேர்தல் நடைபெறும். மாறாக ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமானது என தீர்ப்பு வெளியாகுமாயின், அதன் பின்னரும் ஆளும் தரப்பில் தொடர்ந்து நீடிக்கும் எதிர்பார்ப்பு எமக்கில்லை. எவ்வாறாயினும், நீதிமன்றத்தின் எந்தவொரு தீர்ப்பையும் ஏற்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து ஆட்சி அமைப்பதற்கு நாம் தயாரில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.